அறிவிக்கப்படாத மாகாண சபைத் தேர்தல் பற்றி ஏன் அவசரம்
வடக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் அதனைப்பற்றி, அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தமிழ் சிவில் சமூகத்தினர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நேரடியாகக் கலந்துரையாட முடியும்.
அறிவிக்கப்படாத ஒரு தேர்தல் தொடர்பில் இப்போதே தீர்மானம் மேற்கொள்வது உசிதமானதாக இருக்காது இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உதயனுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
அடுத்த வருடம் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று இதுவரை எவரும் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி கூட அடுத்த வருடம் நாட்டில் எந்தவித தேர்தலும் இடம் பெறாது என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தீர்மானிப்பது பொருத்தமானதாக இருக்காது. மேலும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ் சிவில் சமூகத்தினர் நேரடியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளமுடியும்.
இதேவேளை மாகாண சபையில் போதிய அதிகாரங்கள் இருக்கும் என்று நான் கூறமாட்டேன். இருப்பினும் மாகாண சபையைக் கைப்பற்றுவதன் ஊடாக வடக்கில் ஆளுநர் எதேச்சதிகாரமாக செயற்படுவதையும், முறையற்ற அரசியல் தலை யீடுகளையும் தடுக்க முடியும். எமது நிலங்களை ஓரளவேனும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply