அரசு – கூட்டமைப்பு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று மீண்டும் அரசாங்கப் பிரதிநிதிகளை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அரசாங்கத் தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பேராசிரியர் ரஜீவ விஜயசிங்ஹ, சஜின் டி வாஸ் குணவர்தன எம்.பி. ஆகியோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், எம். சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அடுத்த வாரமளவில் அதுகுறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றிய அறிக்கை பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்காக வெளியிட்டு வைக்கப்படுமெனவும் அரியநேந்திரன் எம்.பி. கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply