இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனைக்கு சீனா எதிர்ப்பு
ஐந்து ஆயிரம் கி.மீட்டர் தொலைவு வரை பறந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணையை பிப்ரவரி மாதம் இந்தியா சோதனை செய்வதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
குறித்த இலக்குகளை தாக்கும் வகையில் அணுக் குண்டுகளை சுமந்து செல்லும் அக்னி ரக ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வருகிறது. அக்னி-1, அக்னி-2, அக்னி-3 வரிசையில் கடந்த மாதம் அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இது, 3 ஆயிரம் கி.மீட்டர் தொலைவு வரை பறந்து சென்று தாக்கக்கூடியது.
அந்த சோதனையின்போது, `வருகிற பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை நடைபெறும். அந்த ஏவுகணை 5 ஆயிரம் கி.மீட்டர் தொலைவு வரை பறந்து சென்று தாக்கும்’ என பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஜெனரல் வி.கே.சரஸ்வத் அறிவித்தார். இதனால், சீன நகரங்களை கூட இந்தியாவில் இருந்து அக்னி-5 ஏவுகணையால் தாக்க முடியும். அக்னி-1, அக்னி-2, அக்னி-3 ஆகிய ஏவுகணைகள் பாகிஸ்தானுக்காகவும், அக்னி-4, அக்னி-5 ஆகிய ஏவுகணைகள் சீனாவுக்காகவும் உள்ளதாக ராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அக்னி-5 ஏவுகணை சோதனைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளும் சீன கம்ïனிஸ்டு கட்சியின் அதிகாரப்பூர்வ இதழ் மற்றும் சீன அரசு பத்திரிகையில் இரு தொடர்பாக கட்டுரை வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு `கொலையாளி’யாக தங்களுடைய அக்னி-5 ஏவுகணை இருக்கும் என இந்திய அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர். இதன் மூலமாக, இந்த பிராந்தியத்தின் வல்லரசு நாடாக மாற இந்தியா ஆர்வத்துடன் இருப்பது தெளிவாகிறது. ராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரிப்பது இந்தியாவின் இலக்காக உள்ளது.
உலக விவகாரங்களில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றும் விதத்தில் தந்திரமான குறிக்கோள்களை இந்தியா கொண்டுள்ளது. இதுபோன்ற உள்நாட்டு, வெளிநாட்டு வலுக்கட்டாய பாதுகாப்பு சூழ்நிலையை பொறுத்துக்கொள்ள முடியாது.
இவ்வாறு சீன பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply