இந்திய உயர் மட்டக்குழு ஜனவரி இலங்கை வருகை

இலங்கை-இந்திய கடல் எல்லைமீறல்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய உயர்மட்டக் குழுவினர் எதிர்வரும் ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஜனவரி 13 ஆம், 14 ஆம் திகதிகளில் இந்திய உயர்மட்டக்குழுவினருடன் இலங்கையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

இந்திய வெளிவிவகார அமைச்சு, மீன்பிடித்துறை அமைச்சு, இந்திய பாதுகாப்பு அமைச்சு, இந்திய கடற்படை ஆகியவற்றின் பிரதிநிதிகள், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறிச் சென்று மீன்பிடிப்பது தவறு என்றும், இலங்கையில் தடைசெய்யப்பட்ட ரோலர் மீன்பிடியை தமிழக மீனவர்கள் மேற்கொள்வது இலங்கையின் சட்டத்தை மீறும் செயல் என்றும் இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வி.எஸ்.ஆர்.மூர்த்தி கூறியுள்ளார்.

இவரின் இக்கருத்துக்களையும் நாம் இலங்கை வரும் இந்திய உயர்மட்டக் குழுவிடம் சுட்டிக்காட்டி, அவர்களுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply