விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது வரையில் காத்திருக்காமல் அனைத்துத் தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் -ரொபட் ஓ பிளேக்

இலங்கையில்  விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது வரையில் காத்திருக்காமல் அனைத்துத் தரப்பும் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் ரொபட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறிவரும் “தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்த பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை”என்ற கருத்தை நிராகரித்தார்.இராணுவ வெற்றி என்பது மிகமிக கடினமான ஒன்றாகும். எனக் குறிப்பிட்ட அவர் வடக்கை இராணுவத்தினர் முழுமைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும் ஆயிரம் தமிழீழ விடுதலைப் புலிகளாவது, தமது போராட்டத்தை முன்கொண்டு செல்வர் என இலங்கையின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்த கருத்தை ரொபட் ஓ பிளேக் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கையின் அனைத்துக் கட்சி மாநாட்டில் இனப்பிரச்சினை தீர்வுக்கான சுமார் 90 வீத யோசனைகளில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிளக் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில் எதிர்கட்சிகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னியில் சுமார் இரண்டு இலட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளார்கள். இது எதிர்காலத்தில் தென்னிலங்கைக்கும் கசப்பான எதிர்காலத்தை உருவாக்கும் என அவர் எதிர்வு கூறியுள்ளார். இந்தியாவின் ஒத்துழைப்புடன் இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியும் என்றும் ரொபட் ஓ பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply