அச்சுறுத்தி தீர்வைத் திணிக்க முயற்சி; அடிபணியமாட்டோம்: மாவை
கூட்டமைப்பை அச்சுறுத்தி, அடிபணியச் செய்து ஜனாதிபதி, தீர்வைத் திணிக்க முயற்சிக்கின்றார். அந்த முயற்சிக்கு அடிபணிய மாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி யான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் முழு நாட்டையும் சிங்கள, பௌத்த, இராணுவமயமாக்குவதற்கு முயற்சிக்கின்றது. முழுநாட்டையும் நாம் ஆள வேண்டும் என்று கேட்கவில்லை. எமது பிரதேசத்தில் சுயநிர்ணயத்துடன் வாழ விரும்புகின்றோம். அவ்வாறான நிலைமை ஏற்படாவிடின் நாம் ஆள்வதற்காகப் போராடுவோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply