நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சர்வதேச கவனத்தை ஈர்ப்பு
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சர்வதேச மட்டத்தில் கவனத்திற் கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தருஸ்மன் அறிக்கையை தூக்கிப்பிடித்தவர்கள் இன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நடுநிலையாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் ஆரம்பத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இன்று அவையாவும் பொய்யாகியுள்ளன. தருஸ்மன் அறிக்கையை ஆரம்பத்தில் பாராட்டிய போதும் இன்று அந்த அறிக்கை தொடர்பில் சந்தேக நிலை உருவாகியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதி லுள்ள சிபார்சுகளை முன்னெடுப்பதாக அமை ச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சாதகமான கருத்துகள் வெளியிடப்பட்டிருப் பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். நாம் ஆரம்பம் முதல் ஒரே நிலைப்பாட்டி லேயே இருந்தோம். உச்சக்கட்ட யுத்தத்தின் போது நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட திட்டமிடப்பட்டது. மக்கள் நலனைக் கருத்திற் கொண்டே ஜனாதிபதி இதனை நியமித்தார்.
அரசியல் பிரச்சினை தீர்வு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆளும் தரப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்த்தரப்பு சார்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பிலும் உறுப்பினர்கள் நியமிக்க அவர்கள் நேர்மையாக முன்வர வேண்டும். திம்பு பேச்சுவார்த்தையின் போதும் இறுதிக் கட்டத்தில் தீர்வு முயற்சிகளை தோல்வியடைய தமிழ் தரப்பு காரணமானது. சில விடயங்களைத் தூக்கிப் பிடித்து வெளியேறினர். அதேபோன்ற நிலையே தற்பொழுதும் உருவாகியுள்ளது.
பொலிஸ் அதிகாரம் குறித்தே த.தே.கூ. பேசி வருகிறது. ஆனால் பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரம் வழங்காதிருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
3 வருடங்களுக்கு முன்னர் வடக்கு, கிழக்கு மக்களுக்கு இருந்த அதே நெருக்கடி நிலை இன்றும் காணப்படுகிறதா இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லையா. அன்றிருந்த நிலைமையை விட மோசமான நிலை காணப்படுவதாக த.தே.கூ. அபாண்டமான குற்றச்சாட்டு கூறுகிறது. அவர்கள் வேறு நேர அட்டவணை படியே செயற்படுகிறார்கள்.
இத்தகைய நபர்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட முடியுமா?
முழு நாட்டையும் த.தே.கூ. தவறாக வழி நடத்துகிறது. பொலிஸ் அதிகாரத்தை பரவலாக்கியதால் இந்தியாவுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நாம் அறிவோம். அத்தகைய நிலை இங்கு ஏற்படுவதை மக்கள் விரும்பவில்லை இந்திய நாட்டுத் தலைவருக்குக் கூட மாநிலங்களில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
முன்பு பிரபாகரனுக்காக சேவையாற்றிய த.தே.கூட்டமைப்பு இன்று புலம்பெயர் அமைப்புக்களின் தேவைகளுக்காக செயற்படுகிறது. அவர்கள் தமிழ் மக்களுக்காக சேவையாற்றவில்லை.
இதுவரை நாம் முன்னெடுத்து வரும் தீர்வு முயற்சிகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகிறது. ஏனைய எதிர்கால முயற்சிகளும் வெற்றியளிக்கும் என்று நம்புகிறேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply