இயேசு கிறிஸ்துவின் அன்பு எல்லா மக்களுடனும் பிணைப்பைக் கொண்டது
இன்று இயேசு கிறிஸ்து பிறந்த நாளைக் கொண்டாடும் எல்லோருடனும் நத்தார் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி யடைகிறேன். மனித குலத்திற்கு நத்தார் கதையில் மிகப்பெரும் அர்த்தங்கள் நிறைந்துள்ளன. இயேசு கிறிஸ்துவின் அன்பு ஏழைகளுடனும் சாதாரண மக்களுடனும் பலமான பிணைப்பைக் கொண்டுள்ளது. அவ் அன்பு இவ் உலகில் வாழும் எல்லா உயிர்களையும் தழுவியது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள நத்தார் பண்டிகை வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் வாழ்த்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இன்று இயேசு கிறிஸ்து பிறந்த நாளைக் கொண்டாடும் எல்லோருடனும் நத்தார் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி யடைகிறேன். மனித குலத்திற்கு நத்தார் கதையில் மிகப்பெரும் அர்த்தங்கள் நிறைந்துள்ளன. பெத்லஹேமில் தொழுவமொன்றில் இடம்பெற்ற இயேசு கிறிஸ்துவின் பிறப் பானது அன்பு, பணிவு என்பவற்றை ஞாபகமூட்டுகின்றது.
இயேசு பாலகர் பிறந்து, தீவனத் தொட்டி யொன்றில் வைக்கப்பட்டிருந்ததும் இடை யர்களே இயேசுவுக்கு முதல் முதலில் காணிக்கை செலுத்தியதும் கிறிஸ்துவின் அன்பு ஏழைகளுடனும் சாதாரண மக்களு டனும் பலமான பிணைப்பைக் கொண்டுள் ளது என்பதையும் அவ்வன்பு எம்முடன் இவ்வுலகைப் பகிர்ந்துகொள்ளும் ஏனைய எல்லா உயிரினங்களையும் தழுவியது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.
அன்பும் ஈகையும் நிறைந்த இந்த நத்தார் பண்டிகைக் காலப்பகுதியில் இனம், சமயம், குலம், செல்வம், சமூக நிலை என்ற வேறுபாடுகளால் மக்களைப் பிரிக்கின்ற தடைகளை உடைத்தெறிய வேண்டும் என கிறிஸ்தவர்கள் எதிர்பார்க் கின்றனர்.
முதல் நத்தாருடன் வந்த இப் பூவுலகுக் கான சமாதான செய்தியும் எல்லோருக்குமான நல்லெண்ணச் செய்தியும் வெறுப்பு, பயங்கரவாதம், போட்டிமனப்பான்மை, பொருளாதாரப் பிரச்சினைகள், காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பின்மை போன்ற பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்துவரும் இன்றைய உலகுக்கு மிகவும் பொருத்த மானதாகும்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் மீண்டும் ஏற்றப்பட்ட அன்பெனும் தீபத்தைக் கொண்டு சமூகத்தின் எல்லா தடைகளும் நீங்கவேண்டும் என்பதே இந்த நல்லெண்ணக் காலப்பகுதியில் கிறிஸ்தவர்கள் செய்யும் பிரார்த்தனைகளின் எதிர்பார்ப்பாகும்.
இந்தப் பிரார்த்தனைகள் எல்லாம் நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனை யுடன் இலங்கை வாழ்கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சி, சமாதானம், நல்லெண்ணம் நிறைந்த ஒரு நத்தாருக்காக எனது வாழ்த் துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply