தமிழ் நாட்டிலிருந்து திரும்பியவர்களுக்கு இலங்கை குடியுரிமைச் சான்றிதழ்
இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து மீண்டும் இலங்கை திரும்பியுள்ள மக்களின் நலன் கருதி இலங்கைக்குடியுரிமைச் சான்றிதழ்களை பெற்றுக் கொடுப்பதற்கான இரண்டு நாள் நடமாடும் சேவை இன்று செவ்வாய்க் கிழமை திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரி மண்டபத்தில் ஆரம்பமானது.
இந்தியாவில் பிறந்த தமது குழந்தைகளுக்கு இலங்கை சான்றிதழ்களைப் பெறுவதில் தமிழகத்தில் இருந்து இலங்கை திரும்பிய மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வந்துள்ளனர்.
இந்தியாவில் தங்கியிருந்த போது அங்கு பிறந்த குழந்தைகள் இலங்கைக்கு திரும்பிய பின்னர் குடியுரிமைச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களை பெறுவதில் பல கஷ்டங்களை அடைந்து வருகின்றனர். அவற்றை நீக்குவதற்று அவர்களுக்கு குடியுரிமை சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன.
இவ்வாறு நாடு திரும்பியோரில் 21 ஆயிரம் பேர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அவதியுறுவதாகவும், இதனைக் கருத்தில் கொண்டே ஈழ ஏதிலிகள் மறுவாழ்வு அமைப்பான ஒஃபர் நிறுவனம் யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்துடன் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஒஃபர் நிறுவன் தலைவர் சீ எஸ் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை வழங்கும் நடமாடும் சேவையில் முதன்மை அதிதியாக திருகோணஒமலை அரசாங்க அதிபர் ரஞ்சித் டி சில்வா, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகரும் தலைவருமான எஸ்.சி.சந்திரகாசன், திருகோணமலை மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர்களான திருமதி சசிதேவி ஜலதீபன் மற்றும் க.உமாமகேஸ்வரன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவிக்கட்டுப்பாட்டதிகாரி அதுலகமகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply