போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்

தேர்தலில் ஏராளமான முறைகேடு நடந்ததாக கூறி, மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும், ஊழல் மலிந்து விட்டதால் புடின் பதவி விலக வேண்டும் என்றும் கோரி போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பிரதமர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இம்மாதம் 4ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், பிரதமர் விளாடிமிர் புடின் தலைமையிலான யுனைடெட் ரஷ்ய கட்சி வெற்றி பெற்றது.

எனினும், மொத்தம் உள்ள 450 உறுப்பினர்களில் இக்கட்சிக்கு 238 இடங்கள் மட்டுமே கிடைத்தன. கடந்த தேர்தலில் 315 எம்பிக்களுடன் 3ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் இருந்த ஆளும்கட்சியின் செல்வாக்கு இப்போது சரிந்து விட்டது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், இப்போதைய பிரதமர் புடின் போட்டியிடுகிறார். இவரது செல்வாக்கு குறைந்துள்ள நிலையில், புடின் மீண்டும் அதிபர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், புடின் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.

தேர்தலில் ஏராளமான முறைகேடு நடந்ததாக கூறி, மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும், ஊழல் மலிந்து விட்டதால் புடின் பதவி விலக வேண்டும் என்றும் கோரி போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக புடின் நேற்று அறிவித்தார். அவர் கூறுகையில், ‘போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்த தயார். ஆனால், எந்த வகையில் பேச்சுவார்த்தை நடத்துவது என்று யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், போராட்டக்காரர்கள் பல பிரிவாக உள்ளனர். தனித்தனி கோரிக்கைகள் விடுக்கின்றனர். எனவே, இவற்றை ஒருங்கிணைத்து பேச்சு நடத்துவது பற்றி விரைவில் முடிவெடுப்பேன்’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply