வட மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு நிச்சயம் போட்டியிடும்

வட மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயமாக போட்டியிடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

தனது இல்லத்தில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடாவிட்டால் தமிழ் மக்கள் விரும்பாத அல்லது பொருத்தமில்லாதவர்கள் சபையை கைப்பற்றுவார்கள்.

அதனால் நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏதோ ஒரு வடிவில் வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும்.

சிவில் சமூகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையை வரவேற்கின்றோம். நாங்கள் சரியான பாதையில் செல்வதற்கு அவர்களின் கருத்துக்கல் ஊக்கப்படத்தும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எக்காலமும் தனது அடிப்படைக் கொள்ளையை விட்டுக் கொடுக்காது. தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு மாறாக என்றுமே சுய நலத்தோடு நடக்காது.

தமிழ் மக்களுக்கான தீர்வைக் கொடுக்காமல் இழுத்தடித்து சென்று, அவர்கள் மீண்டும் குருதி சிந்த வைக்க வேண்டும் என சிங்களத் தலைமைகள் நினைக்கின்றார்கள். எமக்கான தீர்வு கிடைக்காமல் நாங்கள் பின்வாங்க மாட்டோம்

தமிழ் மக்களுடைய அடிப்படை அரசியல் அபிலாசைகளான வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்கள் கொண்ட எங்களை நாங்களே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ‘தமிழ் தேசிய இனம்’ என்ற தீர்வைத் தவிர வேறு எந்த தீர்வையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளாது கொள்ளவும்மாட்டது

எமக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் வட மாகாண தேர்தலில் போட்டியிடுவோம் என்றார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply