பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை; சடலமும் 11 பேரும் காணமற் போன செய்தி உண்மையற்றது: யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி எடுத்துவரப்பட்ட சடலத்தையும் அதனுடன் கூட வந்த பதினொரு பேரையும் காணவில்லையென சுன்னாகம் பொலிஸிலும் புளியங்குளம் பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆனைக்குழுவின் யாழ் அலுவலகத்திலும் முறையிடப்பட்ட செய்தி தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படும் நபர் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவுடன் உரையாடினார். கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சடலத்துடன் வந்த 11 பேரையும் கடத்தப்பட்டமை தொடர்பான சம்பவம் வெறும் கட்டுக்கதை என யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் நபர் ஒருவரை கட்டுநாயகா விமான நிலையத்திலிருந்து கொண்டுவருவதற்கு 11 பேர் சென்றதாகவும் அவர்கள் காணாமற் போனதாக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணையின் போது மரணமடைந்த நபரது சடலம் கட்டுநாயகா விமான நிலையத்திற்கு மற்றும் ஓமந்தை சோதனைச் சாவடிக்கு கொண்டுவரப்பட்டமைக்கான பதிவுகள் இல்லை எனவும் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இவர்கள் காணாமற்போனமை தொடர்பாக எந்தவித முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

நேற்று வியாழக்கிழமை மாலை, உயிரிழந்தவர் எனத் தெரிவிக்கப்படும் நபர் கொழும்பில் இருப்பதாகவும் அவர் யாழ் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை இம்முறைப்பாடு தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை முறைப்பாட்டாளருக்கு வந்த தொலைபேசி இலக்கத்துடன் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply