மொக்குத்தனமான அறிக்கைகளை விட்டு முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம்: எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
கிழக்கில் ஆயுதக் குழுக்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை இது சுத்தமான பொய் ஆளுநர் அலவி மௌலானாவின் அறிக்கையை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன் மொக்குத் தனமான அறிக்கைகளை விட்டு முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிழக்கை பற்றி எதுவும் அறியாத அவர் உளறிகொட்டிக் கொண்டுடிருக்கிறார்.கொழுப்பிலிருந்து அறிக்கை விட்டு எமது மக்களைப் பிரச்சினைகளுக்கு உள்ளாக்க வேண்டாம். உங்கள் வேலையை பார்த்துகொண்டு நீங்கள் இருப்பதே உங்களுக்குச் சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மக்கள் பிரச்சினை இன்றி நிம்மதியாக வாழ்கிறார்கள் ஆயுதகுழுக்கள் என்ற போர்வையில் மீண்டும் அந்த மக்களை பிரச்சினைக்குள் சிக்க வைக்க வேண்டாம் எமது மக்களின் பிரச்சினைகளை நாமே பார்த்துக் கொள்வோம், அதனைத் தீர்த்துக் கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார் .
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைள் அதிகரித்துள்ளதாகவும் மத்திய கிழக்கு நாடுகளும் அனைத்துலக தீவிரவாத அமைப்புகளும் இதற்கு உதவி வருவதாகவும் ஆங்கில செய்திதாள் ஒன்று மேல்மாகாண ஆளுனர் அலவி மௌலானாவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது
கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் சூபி முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு இந்த ஆயுதக்குழுக்கள் முனைவதாகவும் வஹாபி இஸ்லாமிய சிந்தனையை பின்பற்றும் இந்த ஆயுதக்குழுக்கள், சூபி முஸ்லிம்களின் மசூதிகளையும், வழிபாட்டு இடங்களையும் தாக்குவதாகவும் அந்த செய்தியில் தெரிவித்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply