ஆனையிறவு உப்பளம் விரைவில் இயங்க ஆரம்பிக்கும்
யுத்த சூழ்நிலை காரணமாக முற்றாக சேதமடைந்திருந்த ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் புனர்நிர்மாணம் செய்து இயங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் ஆனையிறவு உப்பளத்துக்கு இவர் மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது உப்பளத்தின் சேதங்களை பார்வையிட்ட அமைச்சர் உடனடியாக திருத்த வேலைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த திருத்த வேலைகளுக்கு அவசியமான அத்தியாவசிய பொருட்களும் வசதிகளும் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. இந்த உப்பளத்தின் திருத்த வேலைகள் பூர்த்தியடைந்ததும் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டின் இறுதிப்பகுதியில் உப்பளத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply