காணாமல்போனவர்களின் விபரங்களைப் பதிவு செய்யும் கூட்டமைப்பு

யாழ். குடாநாட்டில் கடந்த காலங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளோரினதும் காணாமல் போனவர்களினதும் பெயர் விபரங்களை பதிவு செய்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொக்குவிலிலுள்ள தனது இல்லத்தில் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்

யாழ். குடாநாட்டில் காணாமல் போனவர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளன. இதன் மூலம் அவர்கள் சிறைச்சாலைகளில் இருக்கிறார்களா? அல்லது வேறிடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனரா என்பதை அறியவுள்ளதுடன், காணாமல் போனவர்களின் விபரங்களை இந்த ஆண்டில் வெளிக்கொண்டுவரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply