வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற புலிகளின் விபரங்களை வெளியிடப்போவதாக அரசாங்கம் தெரிவிப்பு

இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கையி லிருந்து தப்பித்து வெளிநாடுகளில் அரசி யல் தஞ்சம் கோரியுள்ள புலிகளின் முக்கி ய நபர்களின் விபரங்களை வெளியிட போவதாக இலங்கை அரசாங்கம் தெரிவி த்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக வலுப்பெற்று வரும் போர் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் 7 நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள புலிகளின் உறுப்பினர்களின் விபரங்களை இவ்வாறு வெளியிட போவதாக தெரிவித்துள்ள அரசு, சுமார் 40 க்கு மேற்பட்ட நபர்களின் விபரங்களை இலங்கை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இவர்களை புலிகளின் போர்க்குற்றவாளிகள் என கூறும் அரசாங்கம், சர்வதேச காவற்துறையினரால் இவர்களை கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டுள்ள போதுலும் இவர்கள் தஞ்சமடைந்த நாடுகள், இவர்களை ஒப்படைக்க மறுத்து வருகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. சில போர்க் குற்றவாளிகளை, வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகள் தங்களது வாகனங்களிலேயே அழைத்து சென்று, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறக்கிவிட்டு, அவர்கள் வெளி நாடு செல்ல உதவியிருப்பதாகவும், அரசு குற்றம் சுமத்தியுள்ளது.

2012 ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையின் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக போர்க்குற்றங்கள் சுமத்தப் படுமானால், இந்த விபரங்களை வெளியிட போவதாக இலங்கை அரசு தெரிவித் துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கையிலிருந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள வன்னி தமிழ் இளைஞர்கள், இலங்கை அரசால் தாம் தேடப்பட்டு வருவதாகவும், தமக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தஞ்சக்கோரிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply