மும்மொழிக் கொள்கையை அமுலாக்க கூடிய பிரயத்தனம்

சகல அரச நிறுவனங்களிலும் அரச கரும கொள்கையை முழுமையாக அமுல்படுத்த இந்த வருடத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இந்த வருடத்தில் மும்மொழிக் கொள்கையை முன்னெடுக்க கல்வி அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2012ல் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினூடாக முன்னெடுக்கப்பட உள்ள விசேட திட்ட ங்கள் குறித்து வினவியபோது கருத்துத் தெரிவித்த அவர் 2012 எமது அமைச்சிற்கு மிக முக்கியமான ஆண்டாகும்.

தமிழ், சிங்கள மொழிக் கொள்கையை அமுல்படுத்த இந்த வருடத்தில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளோம்.

சகல அரசாங்க நிறுவனங்களிலும் அரச கரும மொழிக்கொள்கையை முழுமையாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தவிர சகல கிராமங்களிலும் மொழிச் சங்கங்களை அமைத்து இரண்டாம் மொழியை கற்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். அரச ஊழியர்கள் மற்றும் தனியார் துறையினருக்கு தமிழ் சிங்கள மொழிகளை கற்பிக்கவும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும். தேசிய பிரச்சினைக்கு சகோதர மொழியை அறியாததும் பிரதான காரணம் அதனால் சகோதர மொழியை கற்பிக்க இந்த வருடத்தில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply