அமெரிக்க அரசு வெளியிட்ட புதிய இந்திய வரைபடம்

அமெரிக்க அரசின் இணையதளத்தில், ‘ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ பகுதியை பாகிஸ்தானுடன் சேர்த்து வெளியிட்டிருந்த வரைபடத்தை திருத்தி, புதிய இந்திய வரைபடத்தை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரசில் ‘டிபார்ட்மென்ட் ஆப் ஸ்டேட்’ என்ற துறையின் இணையதளத்தில் நாடுகள் பற்றிய பிரிவில், உலக நாடுகளை பற்றிய குறிப்புகள் மற்றும் வரைபடங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், இந்தியாவின் வரைபடத்தில் இடம் பெற வேண்டிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(பி.ஓ.கே) பகுதியை, பாகிஸ்தானில் சேர்த்து வெளியிட்டிருந்தனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் இதை கண்டுபிடித்த இந்திய அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த பிரச்னையை அமெரிக்க அரசின் கவனத்துக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் கொண்டு சென்றது. சர்ச்சைக்குரிய பகுதியை எப்படி பாகிஸ்தானில் சேர்த்து வரைபடம் வெளியிடலாம் என அமெரிக்காவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, அந்த வரைபடத்தை அமெரிக்கா வாபஸ் பெற்றது.

இந்நிலையில், புதிய இந்திய வரைபடத்தை அமெரிக்க அரசு தனது இணை யதளத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்து, அமெரிக்க அரசின் ஸ்டேட் துறையின் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நூலந்த் நேற்று முன் தினம் மாலை நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் இணையதளத்தில் முதலில் வெளியிட்டிருந்த இந்திய வரைபடத்தில் சிறிய தவறு ஏற்பட்டிருந்தது. அதை இப்போது சரி செய்து,

புதிய வரைபடத்தை வெளியிட்டிருக்கிறோம். அதை நீங்கள் பார்த்தால், பிரச்னைக்குரிய பகுதிகளில் அமெரிக்க அரசு எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்பது தெளிவாகும். பிரச்னைக்குரிய பகுதிகளில் இருதரப்பினரும் அமைதியாக பேசி தீர்வு காண வேண்டும் என்பதே அமெரிக்க அரசு கூறுகிறது. இவ்வாறு விக்டோரியா தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply