பட்டினி வாழ்வை எதிர்நோக்கும் வடபகுதி மீனவர்கள்
வடபகுதிக் கடற்பரப்பில் தமிழ் நாட்டு மீனவர்கள் அத்துமீறி உள்நுழைவது அதிகரித்து வருவதால், இந்தப் பகுதி மீனவக் குடும்பங்கள் பட்டினியால் வாட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என வடமாகாண கடல் தொழிலாளர் சமாசத் தலைவர் எஸ். தவரெட்ணம் தெரிவித்துள்ளார்.
2012இன் ஆரம்பத்திலேயே தமிழக மீனர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுதாகவும் அவர் கூறினார்.
இந்திய மீனவர்கள் வடபகுதிக்கு வந்து தொழில் செய்ய வேண்டாம் என பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதும், அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் இந்தப் குதிக்கு வருவதால் வடபகுதி கடற்தொழிலாளர்கள் கடற்றொழில் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த நிலை தொடருமானால் வடபகுதி கடல் தொழிலாளர்கள் வருமானத்தை இழக்க நேர்ந்து அவர்களது குடும்பங்கள் பட்டினி வாழ்வுக்கு செல்லக் கூடிய அபாய நிலை ஏற்படும் என்றும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply