காணாமற் போனவர்களின் விபரங்களை நேரில் திரட்டுகிறது கூட்டமைப்பு

கடத்தப்பட்டோர், காணாமல் போனோர் மற்றும் தடுப்புக் காவலில் உள்ளோர் தொடர்பான விபரங்களை தற்பொழுது மக்களிடமிருந்தே நேரடியாக திரட்டுவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

இவர்கள் தொடர்பான விபரங்களை அறிவதற்குப் பலவழிகளில் முயன்றும் அவை கிடைக்கப்பெறாததை அடுத்தே, இந்த நடவடிக்கைகயை மேற்கொள்ளத் தீர்மானித்ததாக வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் தங்களது குடும்பத்தில் காணாமல்போனோர் மற்றும் தடுப்புக் காவலில் உள்ளோர் தொடர்பான விபரங்களை அந்தந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்கள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்றும், காணாமல்போனவர்கள் தொடர்பான உரிய ஆவணங்களுடன் நேரில் சமூகம் தந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் காரியாலயத்தில் பதிவுசெய்து கொள்ளுமாறும் கூறிய சிவசக்தி ஆனந்தன், 024-2221898 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவும் வவுனியாவில் உள்ள தமது அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply