நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் சிறப்பான பரிந்துரைகள்

கேள்வி:- கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கை தொடர்பாக உங்களது பார்வை எத்தகையது?

பதில்:- மிகத் தெளிவான வகையில் யுத்த காலத்திலும் அதற்கு பின்னணியாக அமைந்த இனப் பிரச்சினையும் அதனோடு தொடர்புடைய ஏனைய பிரச்சினைகளும் தொடர்பாக் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட விரிவான அறிக்கையே இதுவாகும். கிடைக்கப்பட்ட பல கடிதங்களும் பலதரப்பட்ட சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான சாட்சியங்களையும் அடிப்படையாக வைத்து ஆணைக்குழு இந்த அறிக்கை மூலம் தமது பரிந்துரைகளையும் முடிவுகளையும் முன்வைத்துள்ளது. எனது பார்வையில் இது மிகவும் வெற்றிகரமான ஒரு அறிக்கையாகும்.

யுத்தகால நிலைமைகளுக்கு முகங்கொடுத்த எந்த ஒரு நாடாவது அது தொடர்பாக இத்தகைய ஒரு அறிக்கையை முன்வைத்துள்ளதா என்று எனக்குக் தெரியாது. அரசாங்கத்தைப் பற்றியும் பாதுகாப்பு படையினர் பற்றியும் விரிவான வகையில் விடயங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதோடு மென்மேலும் விமர்சனத்துக்குட்படுத்தப்பட வேண்டிய விடயங்களையும் அதன் மூலம் சுட்டிக் காட்டுகின்றது. எல். ரி. ரி. ஈ. யின் நடவடிக்கைகள் பற்றியும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் குறைபாடுகள் காணப்பட்டாலும் இலங்கைக்குரிய ஒரு அடையாளத்தை கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய சரியான வழிமுறை எது என்பதையும் அதனூடாக சுட்டிக்காட்டுகின்றது. இந்த நோக்கில் பார்த்தால் இது வரலாற்றுப் புகழ் மிக்க ஒரு அறிக்கையாகும். அதனடிப்படையில் எதிர்கால வழிமுறைகளைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

கேள்வி:- எல். ரி.ரி. ஈ. யினரால் கொலை செய்யப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்கள் 10,000 க்கும் மேற்பட்டவர்களது தகவல்கள் இல்லையென்ற கருத்து இங்கு முன்வைக்கப்பட்டது. அது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பதில்:- யுத்த நடவடிக்கைகளின் இறுதி கட்டத்தில் நடந்தது என்ன என்பது பற்றி ஆராயவே இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டது. எனவே இந்த அறிக்கை வெளியாகி இருப்பது அந்தக் கடைசி கால கட்டத்துக்கு அமையவேயாகும். எல். ரி.ரி. ஈ. யினால் நடத்தப்பட்ட மனித படு கொலைகள் அதற்கு முன் நடத்தப்பட்டவையாகும். அவர்கள் அவ்வாறு செய்ததை யாவரும் அறிவர். அத்தகவல்கள் இப்போதைக்கு அறிக்கையாக தொகுக்கப்பட்டுமுள்ளது. எனவே அவற்றை இங்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை. இதுவரை ஆராயப்பட்டது யுத்தத்தின் கடைசி 3 மாத காலத்தில் நடைபெற்ற விடயங்களேயாகும். இதனால் அத்தகைய ஒரு தேவை ஏற்படாது.

கேள்வி:- அவ்வறிக்கை பற்றி சர்வதேச மட்டத்தில் பலவகையான எதிர்க்கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சிலர் இவ்வறிக்கை பற்றி நல்ல நோக்கில் பார்த்தாலும் இன்னும் சிலர் பிழையான பார்வையில் பார்க்கின்றனர். இத்தகைய கருத்துக்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிaர்கள்?

பதில்:- உண்மையில் சர்வதேச ரீதியில் இதை சிறப்பானது என்றே கூறவேண்டும். நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியின் செயற்பாடுகளைக் கூட அதில் விமர்சன ரீதியில் பார்த்திருக்கிறார்கள். ஜனாதிபதியே நியமித்த ஆணைக்குழு அவ்வாறு செயற்படும் போது சர்வதேச ரீதியில் என்ன கூற முடியும்? ஆனால் இந்நடவடிக்கைகளுக்கு ஏற்ற பொறுப்புக்கள் பற்றி தெளிவான முடிவுகள் இல்லை என்று சர்வதேச மட்டத்தில் குறை கூறி இருக்கிறார்கள். அதைவிட ஆராய வேண்டிய நிலைமை இருந்தால் அது பற்றி பாதுகாப்பு படைகள், இராணுவம், பொலிஸாரோடு பரிசீலனை செய்ய வேண்டுமென்று அங்கு குறிப்பிட்டிருக்கின்றது. பாதுகாப்புப் படையினர் எல்லையை மீறி நடந்து கொண்ட சந்தர்ப்பங்கள் இருப்பின் அவையும் பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்வி:- அமெரிக்கா முன்வைத்துள்ள கருத்துப் பற்றி….

பதில்:- இந்த நிகழ்வுக்கு ஏற்ற பொறுப்புக்கள் பற்றி விரிவாக குறிப்பிடப்படவில்லையென அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந் நடவடிக்கைகள் எத்தரப்பினால் ஏற்படுத்தப்பட்டது என்பதை ஆராய்வது அவ்வாணைக்குழுவின் கடமையல்ல. அத்தகைய நிலைமை இனிமேலும், ஏற்படாதிருக்க செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு குறிப்பிட்டுள்ளனர்.

கேள்வி:- அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் அவசியம் தொடர்பாக அரசாங்கத்தின் ஓர் அமைச்சர் என்ற வகையில் நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்?

பதில்:- இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத்தான் வேண்டும். அதிலுள்ள சகல எழுத்துக்களும் கூட நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாணைக்குழு ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்கவே நியமிக்கப் பட்டது. பரிந்துரைகளை அவரும் நடைமுறைப்படுத்தலாம். இல்லாவிட்டால் கபினட் அமைச்சரவை ஊடாகவும் பாதுகாப்பு அமைச்சினூடாகவும் தேவையா னால் அவற்றினூடாக நியமிக்கப்படும் வேறு சபையொன்றினூடாகவும் இப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தலாம்.

கேள்வி:- இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் பாராளுமன்றத்துக்கு ஏதாவது ஒருவகையில் கடமைகள் ஒப்படைக்கப்படுகின்றதா?

பதில்:- இல்லை. பாராளுமன்றத்துக்கு அதை முன்வைப்பதால் அது பிரசித்தி பெற்ற ஒன்றாகக் கலைக்கப்பட்டது. எந்த ஒரு நபரும் இதைக் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

பாராளுமன்றம் சட்டங்களை உருவாக்குகின்றது. இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் கபினட் அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்படும் கடமைகளுக்கிணங்க ஏனைய நடவடிக்கைகள் தொடர்பான தொடர்புகளைத் தவிர பாராளுமன்றத்துக்கு குறிப்பிட்ட எந்த பொறுப்புகளும் கொடுக்கப்படமாட்டாது.

கேள்வி:- சிவில் சமூகம் இச்சந்தர்ப்பத்தில் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றதா?

பதில்:- ஒருசில உத்வேகங்கள் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து விடயங்களை முன்வைக்கலாம். இவ்வறிக்கை பொறுப்புணர்வுடன் எழுதப்பட்டாலும் அரசுக்கெதிரான குழுக்கள் இதற்கு கல்லெறிகிறார்கள். அவர்களுக்குத் தேவை இவ்விடயங்கள் பற்றி சாதாரண ஒரு மத்தியஸ்தம் வகிப்பது அல்ல. அவர்கள் அரசை கவிழ்க்கவே முனைகின்றனர். இது எதுவாக இருந்தாலும் கல் எறிகிறார்கள். ஆனால் அவைபற்றி கவனமெடுக்காது விமர்சன ரீதியாக அவற்றைப் பார்த்து நடத்தப்படும் சாதாரண விமர்சனங்கள் தொடர்பாக இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு வழிகோலு வதாகும்.

கேள்வி:- இதிலுள்ள சில பரிந்துரை கள் உங்களது அமைச்சுக்கும் நேரடியாகவே சம்பந்தப்படுகின்றது. உதாரணமான மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, இவற்றுக்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி உங்களுக்கு விளக்க முடியுமா?

பதில்:- நாம் இன்னமும் இருப்பது கரையில், எமக்கென்று செய்ய இருக்கும் கடமைகள் பெரும் கடலைப் போன்றதாகும். சிங்களம்- தமிழ் மொழிகளைக் கற்பிப்பது போலவே ஆங்கில மொழித் திறனை ஏற்படுத்தவும் நாம் சில செயற்பாடுகளைச் செய்திருக்கிறோம். இன்னமும் செய்து கொண்டு இருக்கிறோம். மும்மொழிச் சமூகமொன்றை ஏற்படுத்துவோம் என்பது இதைத்தான்.

நாடு முழுவதும் மொழிச் சபைகளை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். இப்போதைக்கு 1000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. ஆசிரியர், பயிற்சியின் கீழ் 30,000 க்கு மேற்பட்டோரை பயிற்றுவிக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு பயிற்சிகள் முடிவடைந்துள்ள மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு நற்சாட்சிப்பத்திரங்களும், கொடுக்கப்பட்டுள்ளன. எதிர்கால நடவடிக்கைகளுக்கு இன்று ஒரு உதாரணத்தை மட்டும் கொடுத்தால் வானொலி நிகழ்ச்சிகள் 3 முறை முன்வைக்கத் திட்டமிட்டிருக்கிறோம். ஒன்று சிங்கள தமிழ் நிகழ்ச்சி, இது ஒரு சங்கீத நிகழ்ச்சி இப்பிரச்சினை பற்றி சொல்லப்படும் பாடல்கள் பற்றி கவ னத்திலெடுக்கப்படும். மற்றையது மொழிகளைக் கற்பிக்கும் நிகழ்ச்சித்திட்டம்.

ரூபவாஹினி நிகழ்ச்சித்திட்டங்களை செய் வது அதி கூடிய செலவான செயற்பாடாகும் என்றாலும் பணத்தைத் தேடிக் கொண்டு சில தொடர்களைக் கொண்ட கதையொன்றை ஒலிபரப்பு செய்ய எண்ணியிருக்கிறோம். அதை உருவாக்க 30 இலட்சங்களாவது தேவை. அப்பணத்தை ஜெர்மன்- கனேடிய நிதியுதவிகளால் பெற்றுக் கொள்ள முடியுமென்று நினைக்கிறோம்.

கேள்வி:- தற்போது பாடசாலை மட்டத்தில் நடைபெறும் மொழிகளைக் கற்பிக்கும் செயற்றிட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அது கல்வி அமைச்சின் கீழ் நடாத்தப்படும் ஒரு வேலைத்திட்டம், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பயிற்சியற்ற ஆசிரியர்கள் மூலம் மொழிகள் கற்பிக்கப் படுவதால் பல குறைபாடுகளைக் காணலாம். மாவட்ட பயிற்சி நிலையங்களுக்கூடாக மொழிகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தும் கல்வி அதிகாரிகளோடு சேர்ந்து நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்.

கேள்வி:- கற்றுக் கொண்ட பாடங் கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவை நியமித்ததில் ஒரு பிரதான நோக்கமாக இருப்பது பல வருடங் கள் நாம் அனுபவித்த துயரங்கள், அழிவுகளைக் கொண்ட அனுபவங் கள் நிறைந்த அத்தகைய ஒரு நிலையை மீண்டும் காணாதிருப்பதா கும். அத்தகைய ஒரு நிலை மீண்டும் ஏற்படாதிருக்க பயங்கரவாதத்தை இரா ணுவ ரீதியில் தோல்வி காணச் செய்த அரசுக்கு பாரியதோர் கடமையை செய்ய முடியும். இதை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்கிaர்கள்?

பதில்:- அத்தகைய ஒரு நிலையை மீண்டும் காணாதிருத்த வேண்டுமானால் பல்லின மக்களினது கலாசாரங்களுக்கும் அடையாளத்துக்கும் மதிப்பளிக்கும் அவற்றைப் பாதுகாக்கும் ஒரே இலங்கை என்ற வகையில் மக்களை கட்டியெழுப்ப வேண்டும். அதற்குத் தேவையான சமூகத்தை ஒழுங்கமைக்க வேண்டும்.

அரசியல் தீர்வு இருப்பது உயர் மட்டத் தில் தமிழ், முஸ்லிம் பிரதி நிதிகளையும் இணங்க வைத்து முன்னர் கூறிய சமூக கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் தான் எமது அமைச்சும் ஈடுபட்டுக் கொண் டிருக்கிறது.

மனப்பூர்வமாக இருமொழிகளால் இணைந்த ஒவ்வொருவரினதும் கலாசாரம், அடையாளத்தைப் பாதுகாக்கும் ஒரே இலங்கையை உருவாக்கும் மனோபாவத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். அதற்கு தமிழ் மக்களை ஈர்த்துக் கொள்ளும் பெரும் கடமை இருப்பது சிங்கள மக்களி டமாகும். அதாவது இச்செயற்பாட்டில் பெரும் சிரமத்தைத் தாங்க வேண்டியிருப்பது சிங்கள மக்களேயாகும்.

மூலம்/ஆக்கம் : கருத்துக்களம்


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply