மத்திய கிழக்கு, யூரோ பிராந்திய நெருக்கடியால் இலங்கைக்கு பாதிப்பு
இறப்பர் விலைகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்திருந்த வேளையில் இலங்கை அரசாங்கம் வரவு செலவு திட்டத்தின் மூலம் இறப்பர் ஏற்றுமதியின் போது செஸ் வரியாக 3 ரூபாவை மேலதிகமாக பெற தீர்மானித்திருந்தமையானது தற்போது பல முகவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகியு்ளளது.
கடந்த மார்ச் மாதம் இறப்பர் கிலோ ஒன்றின் விலை சுமார் 600 ரூபாவாக காணப்பட்டது. ஆயினும் தற்போது யூரோ பிராந்திய நெருக்கடியால் தற்போது 340 ரூபாவாக காணப்படுகிறது. இந்த விலையானது மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. ஏனெனில் யூரோ பிராந்திய நெருக்கடியால் கேள்வி குறைவடைந்து வருகிறது. இறப்பருக்கு பெருமளவு கேள்வி யூரோ பிராந்திய நாடுகளிலிருந்து வருகிறது.
எனவே இந்த செஸ் வரி அமுல்படுத்தப்பட்டுள்ள நேரம் தவறானது. இந்த வரியானது, விலை அதிகரித்து காணப்பட்ட வேளையில் அமுல்படுத்தப்பட்டிருந்தால் பெருமளவு வருமானத்தை அரசால் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும் என அந்த பங்குமுகவர்கள் தமது விமர்சனத்தில் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் குறைவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் நிலவுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply