தமிழ் அரசியல் கைதிகளை சுதந்திர தினத்திலாவது விடுவியுங்கள்
நீண்டகாலமாக விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படாது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எதிர்வரும் சுதந்திரதினத்திலாவது விடுதலை செய்யுங்கள்.
இவர்களை பிணையிலாவது விடுதலை செய்யுங்கள். குறைந்தபட்சம் அங்கவீனர்களான கைதிகள் மற்றும் பெண் கைதிகளையாவது விடுதலை செய்யுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மேலும் தெரிவிக்கையில்,
‘தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுத்து வருகின்றோம். மொத்தமாக 860 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களாகிவிட்டன. இந்த நிலையில் இவர்களை தடுத்துவைத்திருப்பதில் எந்தவித பலனுமில்லை. இவர்களை விடுதலை செய்வதால் அரசாங்கத்திற்கே அதிக இலாபமுள்ளது. இவர்களை விடுவிப்பதால் சிறைச்சாலைகளில் இடநெருக்கடி குறைவடையுமென்பதுடன், பராமரிப்பு செலவுகளும் மிஞ்சும். குறைந்தபட்சம் தடுப்புக்காவலிலுள்ள அங்கவீனர்களான கைதிகளையும் பெண் கைதிகளையுமாவது சுதந்திரதினத்தன்று விடுதலை செய்யுமாறு கோருகின்றோம்’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply