இன உறவுக்கு வேட்டு வைக்கும் சதிச் செயல்
மட்டக்களப்பில் அமைந்துள்ள சுவாமி சுவாமி விபுலானந்தரின் சிலை சேதமாக்கப்பட்டதன் பின்னணியில் சில விஷமிகள் செயற்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் மக்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு இது செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு ஆரையம்பதி எல்லையில், நிர்மாணிக்கப்பட்டிருந்த சுவாமி விபுலானந்தரின் மஉருவச்சிலை இனந்தெரியாத நபர்களினால் நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காத்தான்குடி ஆரையம்பதி எல்லையில் பதற்றம் நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply