சிறிரெலோ தலைவர் உதயராசாவின் தைத்திருநாள் வாழ்த்துச்செய்தி
கடந்த 3 தசாப்பத காலமாக பல்வேறு துன்பதுயரங்களுக்கு மத்தியில் தைத்திருநாளை கொண்டாடிவந்த எம் மக்கள் இத் தைத்திருநாள் முதல் மனதில் சந்தோசம் பொங்க வாழ இறைவனை பிரார்த்திப்பதாக சிறிரெலோ தலைவர் ப.உதயராசா தனது தைத்திருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;
கடந்த காலங்களில் தைத்திருநாளை எம் மக்கள் கொண்டாடும் போது தைபிறந்தால் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடின போதும் அவர்களின் எதிர்பார்ப்பானது இளவு காத்தகிளியாகவே அமைந்து எமாற்றத்தினை மட்டுமே கொடுத்துச்சென்றது.
கடந்த காலங்களில் எமாற்றத்தினை கொடுத்துச்சென்ற தைத்திருநாளானது இன்று முதல் எம்மக்களின் எதிர்பார்ப்பினையும் அபிலாசைகளையும் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எம்மவர்களின் மனங்களில் ஒளிக்கீற்றாய் வீசுகின்றது.
எம்மக்களின் மனங்களில் 3 தசாப்பத காலங்களிற்கு பின் தைபிறக்கின்ற போது உருவாகியிருக்கின்ற நம்பிக்கையானது நிலைத்துநிற்க வேண்டுமாயின் அவர்களின் மனங்களில் உள்ள மறாத வடுக்களை மறக்க வைத்து சந்தோசமாக வாழ அரசாங்கம் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
தினமும் தமது உறவுகளை காணாது ஏங்கித்தவிப்பவர்களுடன் அவர்களின் உறவுகளை மீண்டும் இணைப்பதன் மூலமும், இன்று வரை மீள குடியேறாமல் தமது சொந்த நிலங்களில் அகதிகளாக வாழு;பவர்களினை அவர்களின் பூர்விக மண்ணில் வாழவும் வழி செய்வதோடு, அழிக்கப்பட்ட எம்மவர்களின் சொத்துக்களையும் கட்டுமானங்களையும் மீண்டும் உருவாக்கிகொள்ளவும்,சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் எந்தவித விசாரணைகள் இன்றி நியாயமற்ற முறையில் வாழும் தமிழ் இளைய தலைமுறையினரை இன்றைய நாளிலிருந்தாவது விடுதலை செய்து அவர்களும் புதியவர்களாக வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில் வாழ அரசாங்கம் வழி செய்ய வேண்டும்.
அத்துடன் எம்மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதுடன்,எம்மவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வினையும் தர அரசாங்கம் இத் தைத்திருநாளிலிருந்தாவது வழி செய்ய தவறுமாயின் மனங்களில் உருவாகியிருக்கின்ற ஒளிக்கீற்றானது அணைந்து அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையினை இல்லாமல் செய்யும் என்பதனை இன்றைய நாளில் அரசிற்கு எடுத்துக்கூறவிரும்புகின்றோம்.
எது எவ்வாறு இருப்பினும், தைதிருநாள் பிறந்திருக்கின்ற போது எம்மக்களின் மனங்களில் வீசுகின்ற ஒளிக்கீற்றானது தொடர்ந்து வீசுவதற்கு தமிழ் தலைமைகள் தமது அகங்காரங்களை இன்று முதல் துறந்து ஒற்றுமையாக செயற்பட்டு எமது மண்ணில் எமது தமிழ் சமூகமானது தலைநிமிர்ந்துவாழ வழி செய்ய வேண்டும் என நாம் இன்றைய நன்நாளிள் கோரிக்கைவிடுவதுடன் எம்மக்களிற்கு தைத்திருநாள் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply