சிவில் நிர்வாகத்தில் தலையீடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்
சிவில் நிர்வாகத்தில் காணப்படும் படைத்தரப்பின் தலையீடுகளை படிப்படியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலக அரச அதிபர் பணிமனையில் இடம்பெற்ற யாழ். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய வீட்டுத்திட்டத்திற்கு அமைவாக கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாமல் இருப்பதற்கும் இலங்கை அரசுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை. அதற்கு இந்திய அரசினது கட்டட ஒப்பந்தகாரர்களே காரணம்.
இதனிடையே யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய வீட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக இரண்டு மாவட்ட அரச அதிபர்களும் அறிக்கை சமர்ப்பிக்கும் பட்சத்திலேயே நடவடிக்கையெடுக்க முடியம்.
படைத்தரப்பினர் பாதுகாப்பு காரணங்களுக்காகவே இதுவரை விடுவிக்கப்படாத பொதுமக்களினதும் ஏனைய பொது இடங்களிலும் இருக்கின்றனர். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகள் படைத்தரப்பினரிடமிருந்து மீட்டு காணி உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மேலுமுள்ள பகுதிகளும் விடுவிக்கப்படவுள்ளதாகவும்இ இவ்வாறே கிளிநொச்சி மாவட்டத்திலும் படையினர் வசமுள்ள மக்களின் காணிகள் மற்றும் வீடுகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்பதுடன், அரசின் கொள்கைக்கமைய மீள்குடியேற்றம்இ அபிவிருத்தி மற்றும் காணியில்லாதவர்களுக்கு காணிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் யாவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பிரகாரமே இறுதி முடிவெடுக்கப்படும்.
யாழ்ப்பாணம்இ கிளிநொச்சி மாவட்டங்களில் சிவில் நிர்வாகத்தில் படைத்தரப்பினரின் தலையீடுகள் இருக்கும் பட்சத்தில் அவற்றையும் படிப்படியாக நீக்குவது தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply