கொழும்பு அபிவிருத்தி குறித்து மனோ-முஸம்மில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் கொழும்பு மாநகர சபை மேயர் ஏ.ஜே.எம். முஸம்மிலுக்கும் இடையில் இன்று காலை 10 மணியளவில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக நம்பகமாகத் தெரியவருகிறது.

கொழும்பு மாநகரை அபிவிருத்தி செய்தல், தமிழ் மொழி அமுலாக்கலைப் பரந்த வகையில் நடைமுறைப்படுத்தல், வீதி புனரமைப்பு நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளல், நகரின் குப்பைக்கூழங்களை அகற்ற சிறந்த முகாமைத்துவத்தை பேணுதல் மற்றும் பொதுமக்களின் சட்ட ரீதியான கட்டிடங்களை அகற்றுவதைத் தவிர்த்தல் உள்ளிட்ட ஐந்து விடயங்களை உள்ளடக்கியதாகவே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியதையடுத்து ஏ.ஜே.எம். முஸம்மில் மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவையும் கோரியிருந்தார். இதற்குச் சாதகமாக பதிலளித்திருந்த மனோ கணேசன் கொழும்பு நகர அபிவிருத்தி மற்றும் தமிழ் மக்களின் மேம்பாடு தொடர்பில் இணைந்து செயற்பட தாம் ஆதரவளிப்பதாக கூறியிருந்தார்.

இதனடிப்படையிலேயே கொழும்பு நகரின் அபிவிருத்தி மேம்பாட்டினைக் கருத்திற் கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கொழும்பு நகர அபிவிருத்தி தொடர்பிலும் பல்வேறு திட்டங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply