அதிகாரப் பகிர்விற்கு எதிரான திரைப்படமொன்றில் விமல் மற்றும் சம்பிக்க
அதிகாரப் பகிர்விற்கு எதிரான திரைப்படத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும், மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் தோன்றுவார்கள் என்றும், இந்தத் திரைப்படத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இயக்குவார் என்றும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்விற்கு எதிராக விமல் வீரவன்ச தீக்குளிக்க இருப்பதுடன், சம்பிக்க ரணவக்க மொட்டையடித்து துறவறம் பூணுவார்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான இந்தியாவின் தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதா? அல்லது இல்லையா என்பதனை ஆளும் கட்சி மக்களுக்கு தெளிவாக அறிவிக்க வேண்டும்.
தற்போது அரசாங்கமோ ஜனாதிபதியோ அதிகாரப் பகிர்வு குறித்து பேசவில்லை. இன்னும் சில தினங்களில் அதிகாரப் பகிர்வு குறித்து இருவர் பேசுவார்கள்.
சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இது தொடர்பில் பேசுவார்கள்.
அதிகாரப் பகிர்விற்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துமாறு ஜனாதிபதி அவர்கள் இருவருக்கும் அனுமதி வழங்கியுள்ளார்.
அதிகாரப் பகிர்விற்கு தாம் இணங்கிய போதிலும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களும் மக்களும் விரும்பவில்லை எனக் கூறுவதனையே ஜனாதிபதி விரும்புகின்றார் என கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் 14ம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply