அமைச்சர்களின் சம்பள அதிகரிப்புக்கு ஜனாதிபதி மறுப்பு

கபினட் அமைச்சர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அமைச்சர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் சம்பளமும் ஒரே மட்டத்திலேயே காணப்படுகிறது. நீதிபதிகளுக்கு மாத்திரமே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனி னும், அமைச்சரவை அமைச்சர்களின் சம்பள அதிகரிப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதி வழங்கவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

அமைச்சர்களின் சம்பளம் அதிகரிக்கப்ப டுவதாக முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தேசிய நீர் வழங்கல் சபை, இலங்கை மின்சாரசபை ஆகிய வற்றின் பணியாளர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் கண்டுள்ளது.

இதற்கு முன்னதாக அவர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 18 வீத அதிகரிப்பும் அதற்கு மேலதிகமாக கொடுப்பனவாக 2,500 ரூபாவும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. அதன் பின்னர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அடிப்படைச் சம்பளத்தை 25 வீதமாக அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் கண்டது.

எனினும், இந்தச் சம்பள அதிகரிப்பு போதாது எனக் கூறி சில தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றன. ஆனாலும், பெரும்பாலானவர்கள் அரசாங்கம் வழங்குவதற்கு இணங்கியிருக்கும் 25 வீத சம்பள உயர்வை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஒருசிலர் மாத்திரமே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வாறு இவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாயின் பெற்றோல், மின்சாரக் கட்டணம் மற்றும் நீர்க்கட்டணத்தை அதிகரிக்கவேண்டியிருக்கும். சம்பள உயர்வு வழங்குவதாயின் அது மக்களின் வரிப்பணம். 30 ஆயிரம் பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 20 மில்லியன் மக்களின் செலவீனத்தை அதிகரிக்க முடியாது.

இதனையும் மீறி கூட்டுத்தாபனங்களின் பணியாளர்கள் தமது போராட்டங்களைத் தொடர்ந்தால் அரசாங்கம் அதற்கு மாற்று நடவடிக்கை எடுக்கும். இலங்கை அமைந்திருக்கும் பிராந்தியத்தின் பல நாடுகளில் மின்வெட்டுக் காணப்படுகிறது. ஆனால் இலங்கையில் அவ்வாறான மின்வெட்டுக்கள் எதுவும் இல்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply