இஸ்லாம் பற்றி பிரசாரம் செய்யும் விசா இல்லாத வெளிநாட்டவரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு
இலங்கையில் தங்கியிருந்து இஸ்லாம் பற்றி பிரசாரம் செய்து வரும் 161 வெளிநாட்டவர்களை நாட்டில் இருந்து வெளியேறுமாறு குடிவரவு கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார். இவர்கள் இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வந்துள்ளனர்.
இந்தநிலையில் இவர்கள் நாடுமுழுவதும் சென்று இஸ்லாம் பற்றி போதனை செய்து வருகின்றனர்.எனினும், இவர்கள் வீசா சட்டங்களை மீறிசெயற்படுவதாக கூறியே நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்களின் அலுவலகம் ஒன்று கொட்டாஞ்சேனையிலும் இயங்கி வருவதாகவும் தப்லித் ஜமாட் என்ற அமைப்பை சேர்ந்த இவர்கள் சுற்றுலாவுக்கு இலங்கைக்கு வந்துள்ள நிலையில் வேறு விடயங்களில் ஈடுபடமுடியாது என்று குடிவரவு கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குறித்த அமைப்பினர் எவ்வித அரசியல் நோக்கங்களையும் கொண்டவர்கள் அல்லர் என்று மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.
இவர்கள் இஸ்லாமின் உண்மையை பிரசாரம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் குறித்த அமைப்பினர், முன்னாள் அமைச்சர் ஏ எச் எம்; பௌஸியை சந்தித்து தம்மை இலங்கையில் இருந்து வெளியேறக்கூறும் உத்தரவை விலக்கிக்கொள்ளும் முயற்சியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply