அமைதி சுபீட்சமான நாடு உருவாக மாணவ சக்தி மிக அவசியமானது
இளைஞர் சக்தியை உரிய முறையில் கட்டியெழுப்புவதன் மூலம் இன்னும் 20 வருடங்களில் இலங்கையை ஒரு சிறந்த பொருளாதார வளம்மிக்க நாடாக்க முடியும்.உலகம் விஞ்ஞான ரீதியில் முன்னேற்றம் கண்டுள்ள இக்கால கட்டத்தில் மாணவர்கள் கல்வியில் எதையும் சாதிக்க முடியும். இன்று மாணவ சமூகம், டாக்டர்கள், பொறியியலாளர்கள் ஆவதை விட அரசியல் தலைவர்களாக வருவதிலேயே நாட்டம் காட்டுகின்றனர். இதுவும் ஆரோக்கியமான ஒன்று. எனினும் மாணவ சமூகம் சூழலைப் பாதுகாப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். ஒவ்வொரு மாணவனும் குறைந்தது ஐந்து மரங்களையாவது நாட்ட வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்உரையாற்றிபோது அப்துல் கலாம் எதிர்காலத்தை நன்கு உணரக் கூடியவர் எனவும், பல பட்டங்ளைப் பெற்ற ஒரு சிறந்த கல்விமான்” எனவும் புகழாரம் சூட்டினார்.
இந்நிகழ்வில் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே.காந்தா மற்றும் இராஜதந்திரிகள், கல்விமான்கள் உட்பட அமைச்சர் திஸ்ஸ வித்தாரனவும் கலந்து கொண்டதுடன் அப்துல் கலாமுக்கு நினைவுச்சின்னமொன்றையும் வழங்கினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply