தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும்
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும். புதிய மகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடு பாரதூரமான விடயமாகும் என்று சிறிரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொழும்பு மகசின் சிறைச்சாலையில் சிங்கள கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதலின்போது தமிழ் அரசியல் கைதிகள் மீதும் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதனால், தமிழ் கைதிகள் பெரும் அச்சத்துக்கு உள்ளாக வேண்டி ஏற்பட்டுள்ளது. தமது உயிருக்கு ஆபத்து வருமென தமிழ் கைதிகள் ஒவ்வொருவரும் எண்ணியிருந்தனர். தெய்வாதீனமாக இத்தகைய சம்பவம் இடம்பெறவில்லை. பதற்றத்தையடுத்து தமிழ் அரசியல் கைதிகள் இடமாற்றப்பட்டுள்ளனர். இத்தகைய சம்பவம் தமிழ் கைதிகளுக்கு சிறைச்சாலைகளில் பாதுகாப்பு அற்றநிலையையே ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கைதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன், யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் அரசாங்கம் விடுவிக்கவேண்டும்.
http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=25_01_2012_013_007&mode=1
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply