நெடுங்கேணி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில் பாதுகாப்பு, சனத்தொகை மற்றும் உலர் உணவு வழங்கல், வீட்டுத்திட்டம், நீர் வழங்கல், சுகாதாரம், காணி, விவசாயம், குளங்கள் புனரமைப்பு, வீதி, மின்சாரம், கல்வி, மருத்துவம், கால்நடை உற்பத்தி, தபால் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டதுடன் கிராம அபிவிருத்திச் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply