இரட்டைக் கொலை சந்தேக நபர் ஓமந்தை பொலிசாரால் கைது
வவுனியா ஓமந்தை மீள்குடியேற்ற கிராமமான பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கணவனையும், மனைவியையும் வெட்டிக்கொலை செய்து விட்டு, தங்க மோதிரங்கள் உட்பட சுமார் 5 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்தின் பிரதான ’இரட்டைக் கொலை’ சந்தேக நபர் நேற்று முன்தினம் ஓமந்தை காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தனது இளைய சகோதரனுடன் இணைந்து இந்த கொலைகளை புரிந்து அவர்களிடமிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றதாகவும், இவருடன் சேர்ந்து கொலையை புரிந்த இளைய சகோதரன் தலைமறைவாகி இருப்பதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட ஆபரணங்கள், கொலைக்கு பயன்படுத்தி ஆயுதங்கள் என்பன மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 19 ஆம் திகதி இரவு பன்றிக்கெய்தகுளத்தில் வசித்து வந்த 65வயதுடைய கந்தையா முத்தையாவின் வீட்டுக்குள் புகுந்த கொலையாளிகள், முத்தையாவை வெட்டிக்கொலை செய்து விட்டு, அவரது விரலை அறுத்து மோதிரத்தை கொள்ளையிட்ட பின்னர், அவரது துணைவியார் முத்தையா பரமேஸ்வரியை கோடாலியால் தாக்கி கொலை செய்து விட்டு தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply