யாழ் குடாநாடு முற்றாக படையினர் வசம் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
வடமராட்சிக் கரையோரங்கள் உட்பட யாழ் குடாநாடு முழுமையாகப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
புதுவருட தினத்தில் கிளிநொச்சிக்கு வடக்காக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பரந்தன் சந்தியைக் கைப்பற்றிய படையினர், தொடர்ந்து 2ம் திகதி கிளிநொச்சியையும், அதனைத் தொடர்ந்து முகமாலை, பளை, சோரன்பற்றுப் பிரதேசங்களைக் கைப்பற்றி, 9ம் திகதி ஆனையிறவைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் எஞ்சியிருந்த குடாநாட்டின் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களான நாகர்கோவில், செம்பியன்பற்று, வெற்றிலைக்கேணி உள்ளிட்ட பிரதேசங்களை நேற்று சனிக்கிழமை படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாக அறிவித்தனர்.
இதன்மூலம், யாழ் குடாநாடு தற்போது படையினரின் முழுக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்கள் முழுமையாகவும், கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும் பகுதியையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் அரைவாசிக்கு மேற்பட்ட பகுதிகளையும் படையினர் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply