முறையற்ற வர்த்தகத்தில் சீனா ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

போலி தயாரிப்புகள் உள்ளிட்ட முறையற்ற வர்த்தகத்தில் சீனா ஈடுபடுவதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா இன்று உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில், “அமெரிக்காவின் வலிமை குறைந்து வருவதாக சிலர் கூறுவது உண்மையல்ல. உலகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் இன்றியமையாத நாடாக அமெரிக்கா தொடர்ந்து விளங்குகிறது.

பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா சிக்கியுள்ள நிலையில், நடுத்தர வர்க்க அமெரிக்கர்களை கவரும் வகையில், வரிச்சலுகைகளும், சிறப்புத் திட்டங்களும் அறிவிக்கப்படும்.

போலி தயாரிப்புகள் மூலம் அமெரிக்கச் சந்தையில் சீனப் பொருட்கள் ஊடுருவுகிறது. இதுபோன்ற முறையற்ற வர்த்தகங்களைக் கண்காணித்து தடுக்க புதிய அமைப்பு உருவாக்கப்படும்,” என்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply