அரசியல் சீர்திருத்தங்களை பரிசீலிக்கிறது கியூபா
கியூபாவை பல வருடங்களாக ஆண்டுவருகின்ற கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திரத்தில் முதல் தடவையாக கட்சி மாநாடு ஒன்று தற்போது நடக்கிறது.
இக்கட்சியின் பிரதிநிதிகள் எண்ணூறுக்கும் அதிகமானோர் சந்திக்கின்ற இந்த மாநாட்டில் பொதுமக்களோ, ஊடகங்களோ அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
கியூபாவுடைய அதிபரின் பதவிக் காலத்தை இன்னதென நிர்ணயிப்பது, கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் இளைஞர்களுக்கும் இடம் தருவது ஆகிய இரண்டு விவகாரங்கள் இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த இரண்டு விஷயங்களையுமே அதிபர் ரவுல் காஸ்ட்ரோ சென்ற வருடம் கட்சிக் கூட்டம் ஒன்றில் முன்வைத்திருந்தார்.
கியூபாவின் அதிபராக சுமார் ஐம்பது ஆண்டுகாலம் பதவியில் இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ உடல்நிலை தொடர்பில் பதவியிறங்க, அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அப்பதவிக்கு வந்தார். ஆனால் ரவுலுக்கே இப்போது எண்பது வயது ஆகிறது.
கியூபாவின் மக்கள் சின்ன அளவில் தொழில் தொடங்கவும், சொத்துகளை வாங்கவும் விற்கவும் அனுமதி வழங்கிய பொருளாதார மாற்றங்கள் அண்மையில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த அரசியல் மாற்றங்கள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply