பெப்ரவரி முதல்வாரத்தில் அநீதிக்கெதிரான போராட்டம்

அநீதிக்கெதிரான மக்கள் போராட்டம் ஒன்றை பெப்ரவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கண்டி ரிவடேல் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற கூட்மொன்றில் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி மாவட்ட ஐ.தே.க. கிளை அமைப்பாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்;களான எம்.எச்.ஏ.ஹலீம், ரவி கருணாநாயக்க, டாக்டர் ஜயலத் ஜயவர்தன, லக்ஷ்மன் கிரியெல்ல, திஸ்ஸ அத்தநாயக்க, உட்படப் பலர் இதில் கலந்து கொண்டனர். ரணில் விக்ரமசிங்க அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘அநீதிக்கெதிராகப் போராடும் இயக்கம் ஒன்றை நாம் ஆரம்பிக்கவுள்ளோம். அதன் முதற்கட்டமாக அடுத்தமாதம் பெப்ரவரி; முதல் வாரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளளோம். இவ்வார்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே இணைத்துக்கொள்வோம். ஏனெனில் எமது அடிமட்ட ஆதரவு போதுமானதாக உள்ளது.

அதேநேரம்; எமது உயர்மட்ட ஆதரவையும் வெளிக்காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக கிராமந்தோறும் எதிர்ப்பு ஆர்பாட்டங்களை தொகுதி அமைப்பாளர்கள் ஒழுங்கு செய்ய வேண்டும்.

அநீதிக்கெதிராக நாம் பல்வேறு மட்டங்களிலும் அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்கவுள்ளோம். க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளை மீள் பரிசீலனை செய்ய 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இது எதனைக் காட்டுகிறது என்றால் பரீட்சை முடிவில் அவர்களுக்கு திருப்தியில்லை என்பதைத்தானே?

அப்படியாயின் இப்பரீட்சை முடிவுகள் இரத்துச் செய்யப்பட வேண்டும். ஒரு மாணவன் 13 வருடங்களாகக் கண் விழித்துப் படித்த படிப்பை ஒரே நிமிடத்தில் குழி தோண்டிப் புதைக்க அனுமதிக்க முடியாது.

பரீட்சைத்; திணைக்களம் 1980ஆம் ஆண்டு முதலே கணினிமயப் படுத்தப்பட்டு விட்டது. கடந்த 30 வருடங்களில் ஏற்படாத தவறு இம்முறை மட்டும் எப்படி வந்தது?

இஸட் புள்ளி முறையை அறிமுகம் செய்யதவர் பல்கலைக்கழகப் பேராசிரியர் பட்டேல். அவரே இதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்தபோது, அவர் பயமுறுத்தப்பட்டு வாய்ப்பூட்டுப் போடப்பட்டார். இஸட் புள்ளி முறையின் தவறுகளைத் திருத்த துறைசார் நிபுணர் குழுவொன்று அமைக்கப்படவேண்டும்.

ஆனால், அதில் நிபுணத்துவம் பெறாத மூவரைக் கொண்ட கமிட்டியே அதுபற்றிப் பரிந்துரை செய்துள்ளது. அதில் குறைபாடுகள் உண்டு. எனவே உயர்தரப்பரீட்சைப் பெறுபேறு தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும். இதுவிடயமாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க பொதுமக்களும் முன் வர வேண்டும்.

மாணவர்களைப் பழிகொடுத்து பல்கலைக் கழகங்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. பல்கலைக் கழகங்களைப் பழிகொடுத்தே உபவேந்தர்களும் பாதுகாக்கப்படவுள்ளனர். எனவேதான் அரசை பழிகொடுத்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார். ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவும் அங்கு உரையாற்றினார். ___

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply