பேச்சு வார்தையில் முன்னேற்றம் ஏற்படுத்த புதிய யுத்தி

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், அரசு தரப்பு பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் ஜி.எல். பீரீஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோருக்கும் இடையில் ஒரு சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

இது பேச்சு வார்தையில் முன்னேற்றம் ஏற்படுத்த புதிய யுத்தியாக அமையுமென அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

கொழும்பில் கடந்த 27.01.2012ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருப்பதாகவும், இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான பெயர்களும் இரா.சம்பந்தனால் அரச தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் நம்பகமான அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரா. சம்பந்தனின் இந்த அரசியல் நகர்வு அதிதீவிர தமிழ்த் தேசியவாதிகளால் நிராகரிகப்படும் சூழலில் இராஜதந்திர வகையிலான உறுதியான ஒரு நிலைப்பாட்டை சம்பந்தன் எடுத்துள்ளாரென தமிழ் அரசியல் பட்டறிவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் 27ஆம் திகதிக்கு முந்திய தினமாகிய 26 ஆம் திகதி முதல் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதுவருடைய இல்லத்தில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின வைபவத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களாகிய இரா. சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன் செல்வராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply