சொந்தமாக காணி இல்லாததால் மீள்குடியேறத் தயங்கும் மக்கள்

சொந்தக் காணி இல்லாததால் நலன்புரி நிலையத்திலுள்ள மக்கள் மீளக் குடியமர்வதற்கு பின்னடிப்பதாக கிளிநொச்சி அரச அதிபர் தெரிவிக்கிறார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மிளக்குடியமர்வு அதன் பின்னரான கட்டுமானங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற போது அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள கிளிநொச்சி மாவட்ட மக்கள் மீளக்குடியமர்வுக்கு பதிவுகளை மேற்கொண்டிருந்தாலும் அவர்களுக்கு சொந்தக் காணிகள் இல்லை. இதனால் அவர்கள் இங்கு குடியமரப் பின்னடிக்கின்றனர். இதேபோன்றுதான் முஸ்லிம் குடும்பங்களும் பதிவுகளை மேற்கொண்டிருந்தாலு ம் அவர்களுக்கு இருக்க காணிகள் இல்லையெனவும் தெரிவித்தார்.

மேற்படி கலந்துரையாடலில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply