பாடசாலையில் இராணுவம் இருப்பதால் சிரமத்தில் மாணவர்கள்
பூநகரியிலுள்ள பாடசாலையில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் மாணவர்கள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப் பதன் காரணமாக இங்குள்ள மாணவர்கள் நான்கு கிலோமீற்றர் தூரம் நடந்து பூநகரி மகாவித்தியாலயத்திற்குச் செல்வதாக பூநகரி கோட்டக் கல்வி அலுவலகர் சு.தர்மரட்ணம் தெரிவித்துள்ளர்.
பூநகரி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதனை அவர் தெரிவித்தார்.
மக்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் பாடசாலை இயங்கவில்லை. கடந்த ஆண்டு தைமாதம் பாடசாலையை விட்டு விலகுவதாக இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். பின்பு சித்திரை மாதம் என்றார்கள். காலம் கடந்து செல்கிறது. பூநகரியில் 8 பாடசாலைகள் தற்பொழுது மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் இல்லாத பாடசாலைகளில் இராணுவ முகாம் அமைந்திருந்தால் பிரச்சனை யில்லை. ஆனால் மாணவர்கள் உள்ள பாடசாலையொன்றில் இராணுவ மகாம் அமைந்திருப்பது மாணவர்களின் கல்விக்கு பெரும் இடையூறாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
விரைவில் பாடசாலையை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply