தமிழகத்திலுள்ள அகதிகள் நாடு திரும்ப அழைப்பு
தமிழ் நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாடு திரும்ப அராசங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் மற்றும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் இந்த அழைப்பினை விடுத்தனர்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் முரளிதரன்,
“இலங்கை வரும் குறித்த அகதிகளுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் மீள்குடியேற்ற அமைச்சு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது.
இந்நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொள்வதுடன் 50,000 ரூபாய் நிதியையும் குறித்த மக்களுக்காக வங்கியில் வைப்பு செய்கின்றோம்” என்றார்.
மீள்குடியேற்றம்:
இதேவேளை யுத்தம் முடிவடைந்து 3 வருடங்களில் சுமார் 99 சத வீதமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
“இன்னும் வவுனியா, செட்டிக்குளம் முகாமிலுள்ள 6,565 பேரும் திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் 1272 பேர் மாத்திரமே இன்னும் மீள்குடியேற்ற வேண்டியுள்ளனர்.
இவர்களில் 200 குடும்பத்தினர் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி கோம்பாவில் பிரதேசத்தில் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.
கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி வரை வட மாகணத்தில் 144,389 குடும்பங்களை சேர்ந்த 468,612 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் 216,412 குடும்பங்களை சேர்ந்த 724,013 பேர் மீள்குடியேற்றப்பட்டள்ளனர்.
இவர்களுக்கு வீடமைப்பு, உட்கட்டமைப்பு, வாழ்வாதார நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு தேவைகளை அரசாங்கம் வழங்கி வருகின்றனர். இதனை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும்.
முன்னர் டிசெம்பர் 31ஆம் திகதிக்கு மீள்குடியேற்றத்தை நிறைவு செய்தவது என அரசாங்கம் தீர்மானித்தது. ஆனால் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை மற்றும் வெள்ள அனர்த்தம் போன்றவற்றினாலேயே இந்த மீள்குடியேற்றம் தாமதடைந்தது.
எனினும் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளளோம். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவடைந்தலும் குறித்த மக்களுக்கு அதிக செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதனால் மீள்குடியேற்ற அமைச்சு தொடர்ந்து செயற்பட வேண்டும். குறித்த அமைச்சு ஏனைய அமைச்சுடன் இணைந்து மீள்குடியேறிய மக்களுக்கு பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொள்ள முடியும்.
இதன் ஒரு கட்டமாகவே இந்திய அரசாங்கத்தின் உதவில் 500 வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சினால் கட்டப்படவுள்ளது. இதற்கு மூன்று வருடங்கள் தேவைப்படும்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்:
உள்நாட்டில் இடம்பெயர்ந்த முஸ்லிம் அகதிகளில் பலர் மீள்குடியேற்றப்படு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் புத்தளத்திலேயே தொடந்து வாழ விரும்புகின்றனர்.
எனினும் வட மாகாணத்திற்கு மீளக்குடியேற விரும்பும் முஸ்விமகளை அரசாங்கம் மீள்குடியேற்றி வருகின்றது. அத்துடன் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கி வருகின்றது.
சம்பூர் மக்கள்:
சம்பூர் பிரதேசத்தை பொருளாதார வலயமாக மாற்றவுள்ளோம். இதன் ஒரு கட்டமாகவே அனல் மின்சார உற்பத்தியை மேற்கொள்ளவுள்ளோம். அத்துடன் பல உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது.
இதன் ஊடாக கிழக்கு மாகாண மக்களுக்கே தொழில் வாய்ப்பு வழங்கப்படுவதுடன் குறித்த பிரதேசம் அபிவிருத்தி அடையும். இதனால் சம்பூர் பிரதேசத்திலுள்ள மக்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவர். இவர்களுக்காக இராணுவம் தற்போது 56 வீடுகளை அமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply