கொழும்பு வருகிறார் றோபேட் ஓ பிளேக்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் எதிர்வரும் 11ஆம் திகதி கொழும்பு வருகிறார். அவரது இந்த அவசர பயணத்தின் பின்னணி குறித்து உடனடியாக விவரம் வெளிவரவில்லை.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் நெருங்கிவரும் நிலையிலும் அந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாகக் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்துக்கான முன்மொழிவை ஆதரிக்க வாஷிங்டன் தீர்மானித்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் பிளேக் கொழும்பு வருகிறார்.

அரசாங்க உயர்மட்ட தலைவர்களையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை தனிப்பட்ட பயணமாக சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அத்தினங்களில் பாகிஸ்தான் செல்லவுள்ளார். இதனால் கொழும்பில் இரண்டு நாள்கள் மட்டுமே தங்கியிருக்கும் பிளேக்கிற்கும், மஹிந்தவிற்குமிடையில் நேரடிப் பேச்சுகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவென உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு கூட்டமைப்பு பேச்சு, ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கையின் பங்கு உட்பட்ட பல விடயங்கள் குறித்து பிளேக் கொழும்பில் பேச்சு நடத்துவாரென்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply