13வது நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே 13 பிளஸ் குறித்து பேசமுடியும்
13வது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே அதற்கு அப்பால் அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சுவார்த்தைகளில் முனைப்புக் காட்ட முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வேறெந்த கட்சியுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்ததை நடத்துவதற்கு தேவையில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
13வது அரசியலமைப்பு திருத்தம் அரசியலமைப்பில் சட்டமாக உள்வாங்கப்பட்டுள்ளதால் பேச்சு வார்த்தைகள் மூலம் அதற்குக் காலத்தைக் கடத்துவது தேவையற்றதாகும் என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சருடனும் ஜனாதிபதி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப்பிடுகின்றது. பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளித்தல் , காணி மற்றும் மாகாண சபைகளை இணைத்தல் முறைமை ஆகிய விடயங்கள் இந்த அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு கூறி யுள்ளது.
இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி ஏற்கனவே கூறியுள்ள நிலையில் அதனை அவ்வாறே நடைமுறைப்படுத்த வேண்டியுள் ளதாகவும் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. 13வது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே அதற்கு அப்பால் அதிகாரப்பகிர்வு குறித்து பேச்சுவார்த்தைகளில் முனைப்புக் காட்ட முடியும் என்றும் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு வலியுறுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply