அமெரிக்க அரசு இலங்கைக்கு கடிதம்
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்த அரசாங்கம் இதுவரை எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அமெரிக்க அரசு இலங்கைக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தாவிட்டால் சர்வதேச அழுத்தங்களுக்கு இலங்கை அடிப்பணிய வேண்டிவரும் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தெரிவுக் குழு விடயத்தில் அரசு தரப்பு தமக்கு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்றும்வரை அதற்கான பிரதிநிதிகளின் பெயர் பரிந்துரை செய்யப்பட மாட்டாதென சுமந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply