ரி.ஆர்.ரி. வானொலியின் பணியினால் 7ஆயிரம் தமிழ் மாணவர்கள் பயன்

ரி.ஆர்.ரி. தமிழ்ஒலி வானொலியில்( பிரான்ஸ்) தாயக உறவுகளை கைவிடமாட்டோம் என்ற சமூக பணியின் மூலமாக கிளிநொச்சி, மன்னார் , வவுனியா போன்ற மாவட்டத்தில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 7000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி வருகின்றனர்.

போரில் பல்வேறு இழப்புக்களின் பின்னர் மீண்டெழுகின்ற வாழ்வில் கல்வியின் கட்டுமானங்களை கட்டியெழுப்புவதற்கும் பல்வேறு இடர்பாடுகளை வன்னி கல்விச் சமுகம் எதிர்கொள்கின்ற நிலையில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களை பரீட்சை நோக்கி நெறிப்படுத்துவதில் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பலவேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடியும் மாணவர்களுக்குரிய கற்றல் உபகரணங்களை வாங்குவதில் உள்ள நெருக்கடிகளும் ஆற்றலுள்ள மாணவர்களின் கற்றலுக்கு இடையூறாக இருப்பது யதார்த்தமானதாக இருக்கின்றது. இந்த அடிப்படையில் பரீட்சையில் சித்தியடைந்த பின்னால் மேற்கொள்ளப்படும் ஊக்குவிப்புக்கள் ஒரு புறம் இருக்க பரீட்சைக்கு முன் மாணவர்களுக்கு இருக்கின்ற நெருக்கடிகளை இனங்கண்டு தீர்ப்பதன் ஊடாக சித்தி எய்தும் வீதத்தை அதிகரிக்க வைக்கக் கூடிய ஏதுநிலை காணப்படுக்கின்ற சூழல் உணரப்பட்டதன் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

புலம் பெயர்ந்து வாழும் உறவுகள் தாயக உறவுகளை கைவிடமாட்டோம் என்ற சமூகப் பணியின் மூலமாக ரி.ஆர்.ரி. தமிழ்ஒலி வானொலியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்த 1300 மாணவர்களுக்கு 5ம் ஆண்டு புலைமைப்பரிசில் பயிற்சி புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கிளிநொச்சி வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களின் த.தே.கூட்டமைப்பு அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply