அத்தியாவசிய தேவைகளுக்காகவே வடக்கு கிழக்கில் இராணுவம்
வடமாகா ணத்தை அரசாங்க இராணுவ மய மாக்குகின்றது என்ற குற்றச்சாட்டினை திட்டவட்டமாக மறுத்துள்ள பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அத்தியாவசிய தேவைகளுக்காகவே நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவம் நிலைகொண்டுள்ளது. இதேபோன்று நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளன என்றும் கூறினார்.
இந்தியாவில் வெளியாகும் பிரபல ஆங்கில பத்திரிகைகளில் ஒன்றான ‘டெக்கான் குரெனிக்கல’ என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே பாதுகாப்பு செயலாளர் இதனை குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் புலம் பெயர்ந்துள்ள சில தமிழர்கள், அரசாங்கம் எல்.ரி.ரி.ஈயை இராணுவ ரீதியில் தோல்வியடையச் செய்து 30 மாதங்கள் சென்றுள்ள போதிலும், வடபகுதியில் பல இடங்களில் இராணுவ முகாம்கள் உள்ளன என்று தெரிவித்துள்ள குற்றச்சாட் டுக்களுக்குப் பதிலளிக்கும் முகமாகவே பாதுகாப்புச் செயலாளர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், வடபகுதியிலுள்ள மக்களின் குடும்ப நிகழ்வுகளிலும் கூட இராணுவத்தினரின் கண்காணிப்பு இருந்து வருகின்றது என்ற குற்றச்சாட்டு பொய்யானது. 30 ஆண்டுகால யுத்தம் முடிவுபெற்றதையடுத்து நாடு பல்வேறு துறைகளில் பாரிய அபிவிருத்தி கண்டு வருகிறது. நாட்டில் மீண்டும் சமாதானமும், அமைதியும் திரும்பியிருக்கிறது.
அரசாங்கத்தின் இந்த நல்ல சாதனைகளைப் புரிந்துகொள்ளாமல் சிலர் இவ்விதம் எங்கள் மீது குற்றஞ்சாட்டுவது நியாயமா? அர சாங்கத்தின் தற்போதைய சாதனைகள் பற்றி நியாயபூர்வமாக ஒருவர் மதிப்பீடு செய்யவேண்டும். அதைவிடுத்து அர சாங்கத்துக்கு எதிரான தடைகளைக் கொண்டுவரவேண்டுமெனக் கூறுவது யதார்த்தபூர்வமற்ற செயல்.
எவ்வித ஆதாரமும் இன்றி அரசாங்கம் மக்களின் உரிமைகளை துஸ்பிரயோகம் செய்கின்றது என்று சுமத்தப்படும் குற்றச் சாட்டுக்கள் நிறுத்தப்பட வேண்டும். இலங்கையில் கடந்த காலத்தில் இடம் பெற்றது சாதாரண கிளர்ச்சியல்ல, உண்மையான யுத்தம். எல்.ரி.ரி.ஈ. என்ற பயங்கரவாத இயக்கத்துடன் அல்குவைதா வைக் கூட ஒப்பிட முடியாது
தமிழர்கள் தமிழ்த் தேசியத்துவ எண் ணத்தைக் கைவிட்டு, யுத்தம் முடிவடைந்த பின்னர் தங்களுக்குக் கிடைக்கும் நன்மைகளையும், அரிய வாய்ப்புக்களையும் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் உள்ளூரில் இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்தமை, 11 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வளித்தமை அரசாங்கத்தின் சாதனைகள் ஆகும். அரசாங்கத்தின் பாதுகாப்பின் கீழ் 700 முன்னாள் புலி உறுப்பினர்கள் மாத்திரமே இன்னமும் உள்ளனர் என்றார்.
எல்.ரி.ரி.ஈ. முக்கியஸ்தர் வி. பாலகுமாருக்கு (முன்னாள் ஈரோஸ் அங்கத்தவர்) என்ன நடந்தது என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர், அவர் தடுப்புக் காவலில் இருக்கிறாரா அல்லது யுத்த முனையில் கொல்லப்பட்டாரா என்பது தெரியாது. இறுதி மனிதாபிமான நடவடிக்கையின் போது பலர் ஐ. சி. ஆர். சி. அமைப்பிடம் சரணடைந்தனர்.
இன்று நாட்டில் சகஜநிலை திரும்பிக்கொண்டிருப்பதனால் சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டிருப்பதுடன், இராணுவத்துக்குப் புதிதாக ஆளணி சேர்க்கப்படுவதில்லை, இளைப்பாறும் இராணுவத்தினரின் இடங்களுக்குப் புதியவர்கள் நியமிக்கப்படுவதில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் தனது பேட்டியில் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply