இரண்டு வருடங்களில் நகர வாழ்க்கைக்குள் நுழையும் முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டம் இரண்டு வருடங்களில் அபிவிருத்தியடைந்த மாவட்டமாக மாற்றப்படும். அதுவரை மக்கள் பொறுமை காப்பதுடன், அரசாங்கம் மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளவில்லை எனக் குற்றஞ் சாட்டி மக்களைக் குழப்புவதற்கு முயற்சிக்கும் தரப்பினரின் ஏமாற்றுப் பேச்சுக்களை செவிமடுக்க வேண்டாமென்றும் மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கோம்பாவில் கிராமசேவகர் பிரிவில், திம்பிலி கிராமத்தில் மீள்குடிய மர்த்தப்படும் 209 குடும்பங்களுக்கான 200 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் நேற்றுக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

மீள்குடியேற்றத்துறை அமைச்சர் குண ரத்ன வீரக்கோன், பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், முல்லைத்தீவு மாவ ட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய விநாயகமூர்த்தி முரளிதரன், முகாம் வாழ்க்கையிலிருந்து உங்களை விடுவிக்கும் நோக்குடனேயே இந்தத் தற்காலிக மீள்குடியேற்றங்கள் நடத்தப்படுகின்றன. உங்களுடைய சொந்த வாழ்விடங்களுக்குச் செல்லும்வரை சுதந்திரமாக நீங்கள் வாழவேண்டும் என்ற நோக்குடனேயே இந்த மீள்குடியேற்றம் செய்யப்படுகிறது.

எதிர்வரும் இரண்டு வருடங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தை அபிவிருத்தி யடைந்ததொரு மாவட்டமாக நாம் மாற்றுவோம். அதுவரை நீங்கள் பொறுமை காக்கவேண்டும். அரசாங்கம் எந்த மீள்குடியேற்றங்களையோ, அபி விருத்தி களையோ மேற்கொள்ளவில்லை. உங் களை அரசாங்கம் கைவிட்டுவிட்டது எனக் கூறி உங்கள் மனங்களைக் குழப்பு வதற்கு சில தரப்பினர் முயற்சிப்பார்கள். அவர்களின் ஏமாற்று வார்த்தைகளை நீங்கள் செவிமடுக்க வேண்டாம். இவர்களின் கருத்துக்கள் பற்றி நீங்கள் சிந்திக்கவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம்.

நாம் உங்களுக்கு மின்சார வசதிகள், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து உட்கட்டுமான வசதிகளையும் ஏற்படுத்தித் தருவோம். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

காணி அதிகாரம், அரச அதிபரின் கீழ் இருப்பதனாலேயே உங்களுக்குத் தேவையானதை உடனடியாக பெறக்கூடிய தாகவிருந்தது. காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் எனக்கூறி ஒரு தேவையற்ற பிரச்சினைகளைக் கிளப்பவும் சிலர் முயற்சிக்கின்றார்கள் என்றும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்நிகழ்வில் உரையாற்றிய மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் குணரட்ன வீரக்கோன், வடபகுதி மக்கள் கலாசாரம் மற்றும் பண்பாட்டுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் என்பதால் வடபகுதி மக்கள் மீதான மதிப்பு மேலும் அதிகரிப்பதாகக் கூறினார்.

தென்பகுதியில் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியிலிருந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கங்களிலும் கால்களை போட்டுக்கொண்டு, முன்னுக்கு இருப்ப வரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு போவார்கள். ஆனால், வடபகுதியில் அவ் வாறு செல்பவர்களைக் காணமுடிவதில்லை. நீங்கள் கலாசாரத்தை மதிக்கிaர்கள். இதனால்தான் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கிறது.

மதம், கலாசாரம் போன்ற வற்றுக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிப் பதாலேயே ஜனாதிபதியும் உங்கள் மீது அக்கறை காட்டி தேவையானவற்றை செய்து கொடுக்குமாறு எமக்குப் பணிப்புரை விடுத்துள்ளார் என்று மேலும் குறிப்பிட்டார்.

கோம்பாவில் பகுதியில் 600 ஏக்கர் காட்டுப் பகுதி துப்பரவாக்கப்பட்டு இங்கு 200 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப் பகுதியில் 430 வீடுகள் அமைக்கப்படவிருக் கும் நிலையில் 200 வீடுகள் முதற்கட்டமாக அமைக்கப் பட்டுள்ளன. எஞ்சிய 230 வீடுகள் கூடிய விரைவில் அமைத்துத் தரப்படும் என மீள்குடியேற்ற அமைச்சு உறுதியளித்துள்ளது.

இப்பகுதியில் 1 மில்லியன் ரூபா செலவில் முன்பள்ளியொன்றும் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply