தெரிவுக் குழுவின் மூலம் தீர்வு காண்பதைவிட வேறு வழியில்லை
பாராளுமன்றத் தெரிவுக் குழு மூலம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்தார்.
இதனைக் குழப்ப முயல வேண்டாம் என கேட்டுக்கொண்ட அமைச்சர், சில கட்சிகள் கடந்த காலங்களைப் போன்று இந்த அரிய சந்தர்ப்பத்தையும் நழுவ விட்டு விடக்கூடாதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
சாவகச்சேரியில் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
எனது அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி அல்லது அமைச்சர்கள் உயர் மட்டத்தினர் யாழ்ப்பாணத்திற்கு வருவது ஒரு அதிசய மாகத் தான் இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்போது அடிக்கடி இங்கு வந்து போகின்றார்கள்.
மக்கள் மீதான நம்பிக்கை, பாசம் மட்டுமின்றி நமது கடமை பொறுப்புக்கள் மீது அவர் கவனம் செலுத்துவது வெளிப் படுகிறது. இங்கு வந்து அதிகாரிகளை அமைச்சர்களை சந்தித்து புதிய பணிப்புரை களையும் வழங்கிச் செல்வது மகிழ்ச்சியான விடயம். அதனைப் பின்பற்றி எமது அமைச்சரவை அமைச்சர்களும் இங்கு வந்து போகின்றார்கள். இந்த வகையில் மக்கள் சார்பில் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நீண்ட காலமாக இந்த நாட்டில் இடம்பெற்ற அழிவு யுகத்துக்கு முடிவு கட்டியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே. அதேபோன்று அபிவிருத்தியிலும் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப் பதுமில்லை தீர்க்க விடுவதுமில்லை. பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகள் ஆக்குவதே அவர்களது உள்நோக்கமாகும்.
எதிர்த் தரப்பினர் எத்தகைய பிரசாரங்களை மேற்கொண்டாலும் தடைகளைப் போட்டாலும் எமது அரசாங்கம் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் என நான் உறுதியாகக் கூறுகின்றேன்.
கடந்த காலங்களில் ஜனாதிபதி எவ்வாறு மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்தாரோ அதேபோன்று தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை யையும் விரைவாகத் தீர்ப்பார் என நம்புகின்றேன்.
இதற்கென பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தத் தெரிவுக் குழு மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகிட்டும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
ஆறு மாத காலத்துக்குள் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதே அவரது நோக்கம்.
இதற்கு சாதகமான நிலை உள்ளது. எந்த அரசாங்கத்திற்கும் இல்லாத மூன்றில் இரண்டு பலம் தற்போதைய அரசாங்கத்துக்கு உள்ளது. அதனால் தெரிவுக் குழு மூலம் வரும் இணக்கப்பாட்டை ஒரு சட்டமாக்கி சட்டமூலமாக்கவே ஜனாதிபதி இந்த தெரிவுக் குழுவை நியமித்துள்ளார்.
பிரச்சினைகள் தீர்ந்தால் தமது அரசியல் அடிபட்டுப் போகும் என சில சக்திகள் அதனைக் குழப்பும் முய்றசியில் ஈடுபட்டுள்ளன. கடந்த காலத்தைப் போலல்லாது இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாது செயற்படுமாறு நான் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply