மன்னார் வளைகுடா கடலில் 200 ஆண்டுகளுக்கு தேவையான எரிபொருள்

மன்னார் வளைகுடா கடலில் 200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் உள்ளது என கடல்சார் துறை, தென் மண்டல இயக்குனர் விஜயன் பேசினார்.

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில், மரைன் மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை, முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமையில், தாளாளர் யூசுப் சாகிப் முன்னிலையில் நடந்து. கடல் சார் துறை தென் மண்டல இயக்குனர் விஜயன் பேசியதாவது;

இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்கள், 215 சிறிய துறைமுகங்கள் உள்ளன. கடலில், 14 மீற்றர் ஆழம் இருக்கும் பகுதிகளில் தான் சரக்குக் கப்பல்கள் செல்ல முடியும். ஆழம் குறைவு காரணமாக, நீர் வழிப் போக்குவரத்தில், சரக்குகள் கொண்டுசெல்வதில் தொய்வு காணப்படுகிறது.

இருப்பினும், ஆண்டுக்கு 10 இலட்சம் தொன் சரக்குகள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. மன்னார் வளைகுடா கடலில், ‘ஹைட்ராய்டு’ என்ற எரிபொருள், 200 ஆண்டுகள் பயன்படுத்தும் அளவிற்கு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply